முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறதா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை: சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்குப் பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்..

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சாராய வியாபாரிகள், கொலையாளிகள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரம் செய்வோர், போதைப் பொருள் விற்பனை செய்வோர், மணல் கடத்தல்காரர்கள் என சட்ட விரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்குப் பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை  தட்டிக் கேட்ட சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாகவும், இதனைத் தட்டிக் கேட்ட ஹரீஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. 

இது இப்படி என்றால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளர் அரிவாளால் ரவுடிக் கும்பலால் வெட்டப்பட்டு இருக்கிறார்.

ஒரு பக்கம் சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள் என்றால், மறுபக்கம் தி.மு.க. அரசே மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் "பெற்றோரை கொண்டாடுவோம்" என்ற மாநாடு முதல்வர் தலைமையில் இந்த மாதம் 22-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து பெற்றோர்களை அழைத்து வர வேண்டுமென்றும், தனியார் பள்ளிகள் தங்கள் பங்காக ஒரு பள்ளிக்கு 20 பெற்றோர்களை அழைத்து வர வேண்டுமென்றும் தி.மு.க. அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. 

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மயிலாடுதுறையில் இரு இளைஞர்களை வெட்டி கொலை செய்தவர்களையும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவக உரிமையாளரை கத்தியால் குத்தியவர்களையும், உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரவும், "பெற்றோர்களை கொண்டாடுவோம்" என்ற பெயரில் "பெற்றோர்களை துன்புறுத்தும்" மாநாட்டினை ரத்து செய்யவும் முதல்வர் முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து