முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகள், தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர்களில் இருந்து சாதிய அடையாளங்கள் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி யிருக்கும் உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களிலும் அத்தகைய முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு நேற்று (பிப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளதாவது: “பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படுவது குறித்து அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களிடையேயான சாதிப் பாகுபாடு சர்ச்சையான விவகாரத்தில் அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ள நிலையில், அந்த ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெருப் பெயர்களில் சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பின், பெயரில் இருக்கும் சாதியை நீக்கிவிட்டு முதன்மை முதன்மை பெயரை மட்டும் தெருக்களுக்குச் சூட்ட அரசு தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில், இப்போது தனிநபர்களின் பெயரில் உள்ள தெருக்களுக்கு அந்த நபர்களின் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு முதன்மை பெயரால் மட்டுமே அழைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சாதிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு செயல்படும் சங்கங்களில், அவற்றின் கல்வி நிறுவனங்களில் மேற்குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவது குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அரசமைப்பின் குறிக்கோளான ‘சாதிகளற்ற சமூகம்’ என்ற நிலையை அடையவே சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோல, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தவும் பாகுபாடுகளைக் களையவும் இடஒதுக்கீடு வழங்கவும்தான் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படலாம்.

சாதிப் பாகுபாடு பெற்றோர்களின் கண்களைக்கூட மறைக்கிறது. இதனால், அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொல்லவும் தயக்கம் காட்டுவதில்லை என்பதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது” என்றார்.

இவ்விவகாரம் தொடர்பான பிற மனுக்களையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களிலும்கூட சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்றும், மேம்பட்ட சமூகங்களிலும் சாதியுணர்வு நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து