முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi 2023 08 14

Source: provided

புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது. டில்லி முதல்வரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, டில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார். டில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பதவியேற்றுக்கொண்ட 7 அமைச்சர்களில் 5 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றவழக்குகளில் டில்லி முதல்வர் ரேகா குப்தாவும் மிக முக்கியமானவராகவும், அமைச்சர் ஆஷிஷ் சூட் அதிக குற்றவழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட சுய பிரமாணப் பத்திரங்கள் மூலமாக இந்த வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிதித்துறையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர்.

ராஜௌரி கார்டன் தொகுதியின் பா.ஜ.க.  எம்.எல்.ஏ. வான மஞ்சிந்தர் சிங் சிர்சா, அதிகபட்சமாக ரூ.248.85 கோடி வரை சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த குறைந்த சொத்துமதிப்பு கொண்ட அமைச்சராக காரவால் நகர் தொகுதி எம்.எல்.ஏ.  கபில் மிஸ்ரா ரூ.1.06 கோடியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

7 அமைச்சர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.56.03 கோடியாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் அவர்கள் மீதான கடன்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். அவர்களில் புதுடில்லி எல்எல்ஏவும் டில்லி துணை முதல்வருமான பர்வேஷ் ஷாகிப் வர்மாவுக்கு ரூ.74.36 கோடி கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 7 அமைச்சர்களில் 6 பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். ஒருவர் மட்டும் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து