முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை  வாபஸ் பெற்றதற்காக திருச்சபை பிரதிநிதிகள் தலைமை செயலகத்தில்  முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களில் டெட் தேர்வு அவசியம் இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கடந்த 2010 முதல் 2023 வரை சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட சுமார் 10,000 ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் சிக்கல் எழுந்தது. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறவேண்டுமென சிறுபான்மையினர் பள்ளியில் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழக்கை வாபஸ் பெற்றது.  இதனால்  சுமார் 10,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் உறுதியாகி உள்ளது.  இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சிறுபான்மை பள்ளிகள் மற்றும் திருச்சபை சேர்ந்த பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிகள் 200க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இது குறித்து பேசியே திருச்சபை பாதியார், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்ற வழக்கினால் 10,000 ஆசிரியர் இடங்கள் உறுதியாகியுள்ளது. இதற்காக முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம்.  2023க்கு பின்பாக நியமனம் செய்யப்பட்ட 2000 இடங்களுக்கு மட்டுமே டெட் தேவை என கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 இடத்திற்கு மேற்பட்ட பள்ளிகள் பலனடைந்துள்ளதாக, தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து