முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் முதன் முறையாக ‘ஸ்டார் கன்டென்டர்’ டேபிள் டென்னிஸ்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      விளையாட்டு
Table-tennis

Source: provided

சென்னை: சென்னையில்  டபிள்யூ. டி.டி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் மார்ச் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  

முதன் முறையாக ...

மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடப்பு ஆண்டுக்கான தொடரின் தகுதி சுற்று நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த தொடர் சென்னையில் நடைபெறுவது விளையாட்டு துறையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் தரத்தை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ்  மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்  இணைந்து இந்த தொடரை ஒருங்கிணைத்துள்ளன. சர்வதேச தொடரான டபிள்யூ. டி.டி  ஸ்டார் கன்டென்டர் சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.38 கோடி பரிசுத் தொகை...

ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் என போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.2.38 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க வீரர்களாக திகழும் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களை போலவே இன்னும் பல திறமையான இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களை உலகுக்கு இந்த தொடர் அறிமுகம் செய்யும் என நம்பப்படுகிறது.

உலகளாவிய மையமாக...

இந்திய அளவில் நடைபெறும் தொழில்முறை டேபிள் டென்னிஸ் லீக்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸின் (யுடிடி) ஐந்தாவது பதிப்பை சென்னை நகரம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த நிலையில் டபிள்யூ. டி.டி  ஸ்டார் கன்டென்டர் தொடரும் சென்னையில் நடைபெறுகிறது. இதன் மூலம் சென்னை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே, செஸ் ஒலிம்பியாட், இரவு நேர சாலை கார் பந்தயம், சர்வதேச கிரிக்கெட் மற்றும் கால்பந்து, ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து