முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவையில் ஆறு மொழிகளில் பதவி பிராமானம் எடுத்துக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi 2025-02-24

Source: provided

டெல்லி : புதிதாக அமைக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவையின் முதல் அமர்வு நேற்று தொடங்கிய நிலையில் ஆறு மொழிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.க. 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தில்லி சட்டப் பேரவையின் இடைக்காலத் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா நேற்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து மூத்த சட்டமன்ற உறுப்பினராக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களின் பதவியேற்பையும் லவ்லி மேற்பார்வையிட்டார். சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பஞ்சாபி மொழியிலும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா சமஸ்கிருதத்திலும் பதவியேற்றனர். கர்னைல் சிங் பஞ்சாபியிலும், பிரத்யும்ன் ராஜ்புத் மற்றும் நீலம் பஹல்வான் சமஸ்கிருதத்திலும் பதவியேற்றனர். அவரைத் தொடர்ந்து அமனதுல்லா கான் (உருது), சந்தன் சௌத்ரி (மைதிலி), அஜய் தத் (ஆங்கிலம்), கஜேந்திர யாதவ் (சமஸ்கிருதம்) ஆகியோரும் பதவியேற்றனர், சமஸ்கிருதத்தில் பதவியேற்ற மற்ற எம்.எல்.ஏக்களில் சஞ்சய் கோயல், ஜிதேந்திர மகாஜன், அஜய் மகாவர், பாஜகவின் கர்னைல் சிங், சௌத்ரி ஜுபைர் மற்றும் அமானதுல்லா கான் ஆகியோர் உருது மொழியைத் தேர்ந்தெடுத்தனர்.

கல்காஜி தொகுதியின் எதிர்க்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான அதிஷியும் பதவியேற்றனர். கோபால் ராய் தனது இருக்கையில் இருந்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார், மைதிலி மொழியில் அனில் ஜா பதவியேற்றார். மோகன் சிங் பிஷ்ட் பதவியேற்ற கடைசி எம்.எல்.ஏ ஆவார். புதிய சட்டப்பேரவைத் தலைவருக்கான வாக்கெடுப்பு நேற்று பிற்பகல் நடைபெற உள்ளது, பாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா அந்தப் பதவியை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த  5-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது, 70 இடங்களில் 48 இடங்களை வென்றது மற்றும் 22 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சியின் பத்தாண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் தில்லி முதல்வர் அதிஷியை சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து