முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - விமர்சனம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      சினிமா
moon-angry-with-me---Review

Source: provided

காதலில் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். ஆனால், பவிஷ் பிரிந்த காதலியை மீண்டும் பார்க்க செல்கிறார். இந்நிலையில், பழைய காதலியுடன் பவிஷ் இணைகிறாரா அல்லது பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்கிறாரா என்பதை இன்றைய இளசுகளின் மனதுக்கு நெருக்கமாக சொல்லும் படமே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. படத்தின் நாயகன் தனுஷின் அக்கா மகன். மகிழ்ச்சி, சோகம், அழுகை, காதல் என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். நடனத்திலும் வெளுத்தி வாங்கியிருக்கிறார். நாயகி அனிகா சுரேந்திரன், குழந்தை தனம் மாறாத முகம், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார்.  சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். எழுதி இயக்கியிருக்கும் நடிகர் தனுஷ், தற்போதைய 2K இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் காதல் கதையை கலர்புல்லாகவும், கலககலப்பாகவும் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இளசுகளை ஆட்டம் போட வைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து