முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.ஐ.டி.யில் விரைவில் புதிய ஹைப்பர்லூப் ரயில் சோதனை ஓட்டம் : மத்திய அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      தமிழகம்
Ashwini-Vaishnav 1

Source: provided

சென்னை : மெட்ரோ ரயில், புல்லட் ரயில்களை எல்லாம் காலி செய்துவிடும் அளவுக்கு உருவாகி வருகிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. விரைவில் இது சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்படவிருக்கிறது.

புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 450 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்த ஹைப்பர்லூப் ரயிலின் வேகம் மணிக்கு 1,100 கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் போக்குவரத்து அமைப்பையே முற்றிலும் மாற்றிவிடும் அளவுக்கு புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக உருவாகியிருக்கிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. இதன் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடம் தயாராக உள்ளது.

இது குறித்த செய்தியை ரயில்வே அமைச்சர் விடியோ மூலம் வெளியிட்டுள்ளார். சென்னை -ஐஐடி வளாகத்துக்குள், அதன் மாணவர்கள் உருவாக்கியிருக்கும் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் பாதையில், சோதனை ஓட்டம் நடைபெறவிருப்பதாகவும், இந்த முயற்சிக்கு, இந்திய ரயில்வேயின் நிதியுதவி சென்னை ஐ.ஐ.டி.க்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஹைப்பர்லூப் ரயில் சேவையில், ஒரு வெற்றிடக் குழாய் தான் ரயில் பாதையாக இருக்கும். அதற்குள் அதிவேகத்தில் ரயில் பயணிக்கும். இதனால், மிக வேகமாக மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். இந்த வெற்றிடக் குழாய்க்குள் ரயிலானது மணிக்கு 1,100 கிலோ மீட்டர் வேகத்தில் பயிணிக்கும். அதாவது சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் கூட ஆகாது, வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து