முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா - கேரளா அணிகள் இன்று இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      விளையாட்டு
Karala 2025-02-21

Source: provided

நாக்பூர் : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முதல் முறையாக....

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி சுற்றுக்கு மும்பை, விதர்பா, குஜராத் மற்றும் கேரளா அணிகள் முன்னேறின. இதில் மும்பையை வீழ்த்தி விதர்பா அணியும், குஜராத்துக்கு எதிரான போட்டியை டிரா செய்த கேரளா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 26) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேரளா அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

ரசிகர்கள் மத்தியில்.... 

அதேசமயம் விதர்பா அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அதில் 20217-18, 2018-19ஆம் ஆண்டுகளில்சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறை இந்த இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான இறுதிபோட்டி குறித்த சில விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். 

போட்டி தகவல்கள்:

மோதும் அணிகள் - விதர்பா vs கேரளா, இடம் - விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாக்பூர், நேரம் - பிப்ரவரி 26 - மார்ச் 02, காலை 9.30 மணி, நேரலை- விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான இந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

விதர்பா அணி:

அக்ஷய் வாத்கர் (கேப்டன்), அதர்வா தைடே, அமன் மொகடே, யாஷ் ரத்தோட், ஹர்ஷ் துபே, அக்ஷய் கர்னேவர், யாஷ் கடம், அக்ஷய் வகாரே, ஆதித்யா தாக்ரே, ஷுபம் காப்சே, நச்சிகேத் பூடே, சித்தேஷ் வாத், யாஷ் தாக்கூர், டேனிஷ் மாலேவார், பார்த் ரேகாடே, கருண் நாயர், துருவ் ஷோரே.

கேரளா அணி:

அக்‌ஷய் சந்திரன், ரோஹன் குன்னும்மாள், வருண் நாயனார், சச்சின் பேபி(கேப்டன்), ஜலஜ் சக்சேனா, முகமது அசாருதீன், சல்மான் நிஸார், அகமது இம்ரான், ஆதித்யா சர்வதே, எம்.டி.நிதீஷ், நெடுமாங்குழி பசில், பசில் தம்பி, விஷ்ணு வினோத், பாபா அபராஜித், ஃபாசில் ஃபனூஸ், வத்சல் கோவிந்த், ஷோன் ரோஜர், வைசாக் சந்திரன், கிருஷ்ண பிரசாத், ஆனந்த் கிருஷ்ணன், கேஎம் ஆசிப்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து