முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
Thirumavalavan-1 2024-06-21

Source: provided

சென்னை : தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில் தான் பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை பிராந்திய மொழி என சொல்கிறார்கள். இந்தி ஒரு பிராந்திய மொழி ன்பதை மறந்து விட்டு பேசுகின்றனர். பிற மொழி .பேசக்கூடிய மக்கள் மீது இந்தியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது.

ஏதேனும் ஒரு இந்திய மொழி மட்டும் அல்ல, அயல் நாட்டு மொழியை கற்க, திறமை வளர்க்க கூட உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பிரெஞ்ச் மொழியை கூட கற்று கொள்கிறார்கள். அது தனி நபரின் விருப்பம். ஆனால் தேசிய கல்வி கொள்கையில் ஒரு நிலைப்பாட்டை வைத்து கொள்கை அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்களை இந்திவாலாக்களாக மாற்ற நினைப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது. 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தி திணிப்பு நடந்து இருக்கிறது. அப்போதும் எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் வந்து இந்தியை திணித்தால் அப்போதும் எதிர்ப்போம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தி அல்லாத பிற மொழி பேசக்கூடிய மக்கள் மீது ஏன் திணிக்க வேண்டும். அண்ணாமலை விதண்டாவாதம் பேசுகிறார். அவரது அரசியலை நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். கர்நாடகாவில் இருந்தால் கன்னடன் என்பார். தமிழ் நாட்டில் இருந்தால் தமிழன் என்பார். ஆர்.எஸ்.எஸ். கூடத்திற்கு சென்றால் இந்து என்பார். பல வேஷம் போடக்கூடியவர் அண்ணாமலை. அண்ணாமலை பேச்சுக்கு தமிழ் நாட்டில் யாரும் முக்கியத்துவம் தர மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து