எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ருத்ரபிரயாக் : உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் மே 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், வரும் மே மாதம் 2-ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோவில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கேதார்நாத் கோவில் திறப்பு அறிவிப்புடன், கர்வால் இமயமலையில் உள்ள நான்கு புனித தலங்களும் திறக்கப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பத்ரிநாத் கோவில் மே 4-ம் தேதி திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 30-ம் தேதி அக்ஷய திரிதியை அன்று திறக்கப்படுகிறது. இந்த நான்கு கோவில்களும் சேர்ந்து சோட்டா சார் தாம் என்ற ஒரு சிறிய யாத்திரை சுற்றுப் பாதையை உருவாக்குகின்றன.
கேதார்நாத் யாத்திரை என்பது இந்து மதத்தின் நான்கு மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்தமாக சார் தாம் யாத்திரை அதாவது நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த பயணத்தில் கேதார்நாத் மட்டுமின்றி பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கும் பயணிக்கலாம், இவை அனைத்தும் புனித கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளன. இந்த யாத்திரைக்கான மிகவும் பிரபலமான பாதை ஹரித்வாரில் இருந்து தொடங்கி நான்கு தலங்களையும் உள்ளடக்கிய பிறகு அதே இடத்தில் முடிகிறது. இந்த புனித இடங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன - கேதார்நாத்தில் சிவன், பத்ரிநாத்தில் விஷ்ணு, கங்கோத்ரியில் கங்கை மற்றும் யமுனோத்ரியில் யமுனா தேவியை வழிபடலாம். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு புனித தலங்களுக்கான யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மேற்கொள்கின்றனர். அதற்கு ஒவ்வொருவரும் முன்பதிவு செய்துகொள்வதும் அவசியம். அதன்படி, நடப்பாண்டு கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-02-2025.
26 Feb 2025 -
மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு
26 Feb 2025ருத்ரபிரயாக் : உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் மே 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
-
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா-உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
26 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம் உக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஓமனிலிருந்து தப்பிய தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
26 Feb 2025கா்நாடகா : ஓமன் நாட்டி தப்பிய 3 தமிழக மீனவர்கள் கர்நாடக கடற்கரையில் பிடிப்பட்டனர்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
26 Feb 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
-
ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்
26 Feb 2025சென்னை, பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
த.வெ.க.வின் மும்மொழி கொள்கைக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
26 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் விய
-
கலைஞர்கள் 45 பேருக்கு ரூ.45 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Feb 2025சென்னை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்
-
தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கவுள்ளது : ஆதவ் அர்ஜூனா பேச்சு
26 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கப்போகிறது என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
இந்தியை இன்னமும் தி.மு.க. எதிர்ப்பது ஏன்? தொண்டர்களுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
26 Feb 2025சென்னை, இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்
-
கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடியில் காலணி உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
26 Feb 2025சென்னை, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழாவில் #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் தலைவர் விஜய்
26 Feb 2025சென்னை : மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று (பி
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
26 Feb 2025கோவை, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமைியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை த.வெ.க. உருவாக்கும்: 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு
26 Feb 2025சென்னை, த.வெ.க. பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள்.
-
தெலங்கானா பள்ளிகள் அனைத்திலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கியது மாநில அரசு
26 Feb 2025தெலங்கானா, தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் உயிரிழப்பு
26 Feb 2025ஓம்துர்மன், சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
-
உள்ளூரிலேயே விலைபோகாதவர்: பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் கே.என்.நேரு
26 Feb 2025திருச்சி : திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, பிரசாந்த் கிஷோரை விமர்சித்துள்ளார்.
-
உலக அளவில் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Feb 2025சென்னை, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று 2,642 பேருக்கு மருத்துவ அலுவலர்
-
மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு
26 Feb 2025சென்னை : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு விட
-
கணினிக்கல்வி கற்பிக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
பஞ்சாப், லூதியானா மேற்கு இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சீவ் அரோரா போட்டி
26 Feb 2025லூதியானா, பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
-
கோவையில் புதிய பா.ஜ.க. அலுவலகம் அமித்ஷா திறந்து வைத்தார்
26 Feb 2025கோவை, புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
-
பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகளில் தேர்வுத்துறை தீவிரம்
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத
-
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
26 Feb 2025சென்னை : தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்று திருமாவளவன் கூறினார்.