முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      உலகம்
Suicide 2023 04 29

ஓம்துர்மன், சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஓம்துர்மன் நகரில் உள்ள சூடான் ராணுவத்தின் மிகப்பெரிய விமானப் படைத் தளமான வாடி சீட்னாவில் இருந்து உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் அன்டோனோவ் விமான நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தில், சூடான் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட பலர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானம் வாடி சீட்னாவில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் குடியிருப்புப் பகுதியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சூடான் ராணுவ மேஜர் ஜெனரல் பஹர் அகமது உள்பட 46 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்த சிலரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பல வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விபத்தில் ராணுவ ஜெனரல் உயிரிழந்தது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

சூடான் நாட்டில் கடந்த 2023 முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது விமானம் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து