முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகளின்படி, சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வின் முதல் கட்டம் கடந்த 17-ம் தேதி முதல் வருகிற 6-ம் தேதி வரை நடைபெறும். தோ்வின் இரண்டாம் கட்டம் மே 5 முதல் மே 20 வரை நடைபெறும்.

இதுதொடா்பாக வருகிற 9-ம் தேதி வரை சம்பந்தப்பட்டவா்கள் கருத்துத் தெரிவிக்கலாம். அந்தக் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னா், இதுதொடா்பான கொள்கை இறுதி செய்யப்படும் என்று சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு இருமுறை நடத்தப்பட்டாலும் ஒரே தோ்வு மையம்தான் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும். தோ்வுக்கான விண்ணப்பத்தின்போது இரு தோ்வுகளுக்கும் தோ்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்றாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து