முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தரவரிசை பட்டியல்: விராட் கோலி முன்னேற்றம்; : முதல் இடத்தில் சுப்மன் கில்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

புதிய பட்டியல்...

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்துக்கான ஒருநாள் புதிய தரவரிசைப் பட்டியல் நேற்று (பிப்.26) வெளியிடப்பட்டது. 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

5-வது இடத்தை... 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி ஒரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

முதல் 10 இடங்கள்

1) ஷுப்மன் கில் -817 புள்ளிகள், 2) பாபர் அசாம் - 770 புள்ளிகள், 3) ரோகித் சர்மா -757 புள்ளிகள், 4)  ஹென்ரிச் கிளாசன் -749 புள்ளிகள், 5)  விராட் கோலி - 743 புள்ளிகள், 6) டேரில் மிட்செல் -717 புள்ளிகள், 7) ஹாரி டெக்டர் -713 புள்ளிகள், 8) சரித் அசலங்கா -694 புள்ளிகள், 9) ஸ்ரேயாஸ் ஐயர்-679 புள்ளிகள், 10)  ஷாய் கோப் - 672 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து