முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித், கில் பங்கேற்பதில் சிக்கல்..?

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      விளையாட்டு
Rohit-2025-02-27

துபாய், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித், கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

அரைஇறுதிக்கு தகுதி... 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனையடுத்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 2-ம் தேதி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

காயத்தால் அவதி...

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கில் களமிறங்குவதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைபிடிப்பு காரணமாக சிறிது நேரம் ஓய்வெடுத்த ரோகித் சர்மா, நேற்றைய பயிற்சியின்போது பேட்டிங் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் அடுத்த போட்டியில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

கில்லுக்கு இல்...

 

மறுமுனையில் சுப்மன் கில்லுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் நேற்றைய பயிற்சியின்போது மைதானத்திற்கே வரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து