முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரியஸ் விருதுக்கான போட்டியில் இருந்து யானிக் சின்னர் விலகல்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Table-tennis

Source: provided

லண்டன் : பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லாரியஸ் விருது...

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்கள் பெயா்களை, சா்வதேச அளவில் விளையாட்டுத் துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. பின்னா், லாரியஸ் உலக விளையாட்டு அகாதெமியை சோ்ந்த 71 உறுப்பினா்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

விளையாட தடை...

சுமார் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஊக்க மருத்து சோதனையில் பாசிட்டிவ் வந்ததால் 3 மாதத்துக்கு டென்னிஸ் போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிப்.9 முதல் மே.4ஆம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முதலிடம்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி கோப்பையை சமீபத்தில் தக்கவைத்துக் கொண்டார். உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் 23வயதாகும் யானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை தவறவிடமாட்டர். ஏனெனில் அடுத்த பிரன்ச் ஓபன் மே.25ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. கடந்தாண்டு நோவக் ஜோகோவிச் லாரியஸ் விருதுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார். வரும் திங்கள் கிழமை (மார்ச்.3) இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து