முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் தொடரில் 65 சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை

புதன்கிழமை, 5 மார்ச் 2025      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இறுதிப்போட்டிக்கு...

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐ.சி.சி. தொடர்களில் ஒரு அணியை 4 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைத்தார். அதுமட்டுமின்றி, ரோகித் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

65 சிக்ஸர்கள் விளாசி... 

இந்தப் போட்டியில் சிக்ஸர் அடித்தபோது ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். ரோகித் சர்மா 65 சிக்ஸர் விளாசி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் (64 சிக்ஸர்கள்) உள்ளார். ரோகித் சர்மா ஏற்கனவே கெயிலின் 331 சிக்ஸர்களின் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 338 சிக்ஸர்களுடன் இந்த சாதனையைப் படைத்துள்ளார். தற்போது அவர் 351 சிக்ஸர்களுடன் ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக உள்ளார்.

அதிக சிக்ஸர் விளாசியவர்கள்:

1) ரோகித் சர்மா -65 சிக்ஸர்கள்.

2) கிறிஸ் கெய்ல்-64 சிக்ஸர்கள்.

3) க்ளென் மேக்ஸ்வெல் -49 சிக்ஸர்கள்.

4) டேவிட் மில்லர் -45 சிக்ஸர்கள்.

5) டேவிட் வார்னர் -42 சிக்ஸர்கள்.

6) சௌரவ் கங்குலி -42 சிக்ஸர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து