முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துரிமையை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: இந்தியா கண்டனம்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Central-government 2021 12-

Source: provided

லண்டன்: லண்டனில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வாகனத்தை மறித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தில் பிரிட்டன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள், கைகளில் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியும், ஒலிப்பெருக்கிகளை வைத்து கோஷமிட்டபடியும் இருந்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலி ஒன்றில், காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், ஜெய்சங்கரின் காரின் முன்பு நின்று இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் கிழிப்பது தெரிகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது,  இந்த பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் இதுபோன்ற அத்துமீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம்.  பேச்சுவார்த்தையை நடத்தும் நாடு அதன் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை இதுபோன்ற வழிகளில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு சம்மந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தனது இங்கிலாந்து பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியின் செவனிங் ஹவுஸில் இருதரப்பு ஆலோசனையில் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து