முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகை பெருக்கம் நல்லது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு பேச்சு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      இந்தியா
chandrababu-naidu

Source: provided

புது டில்லி: தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய நாயுடு,

உலகில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் வயது முதிர்ந்த மக்கள்தொகையுடன் போராடி வரும் நிலையில், மக்கள்தொகை பலன்களை நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு சொத்தாக அங்கீகரித்து, இப்போது தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது எனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்.

பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை ஒரு பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறியாக தான் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம் தான். ஆனால் நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்.

உலகளாவிய சமூகங்கள் தங்களுக்கான சேவைகளுக்காக இந்தியர்களான நம்மையைச் சார்ந்துள்ளன. இது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று நாயுடு வலியுறுத்தினார். மும்மொழிக் கொள்கை குறித்து நாயுடு கூறுகையில், "இப்போதெல்லாம், உலகளாவிய வாய்ப்புகளுக்காக அனைவரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்களை நிறுவுவது குறித்து ஊக்குவிக்கப் போகிறேன்" என தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து