முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பைக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.டோனி 8-வது டவுன்: சி.எஸ்.கே. நிர்வாகம் தகவல்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2024-10-26

Source: provided

சென்னை : மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில்  மும்பை இந்தியன்ஸ் - சி.எஸ்.கே.  அணிகள் மோதுகின்றன. இதற்கான சி.எஸ்.கே.  லெவனில் விஜய் சங்கர், அஸ்வின் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.டோனி 8-வது டவுனாக இறங்குகிறார்.

சி.எஸ்.கே.  அணி...

மும்பைக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே.  அணியில் மேலும் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து 2-வது சீசனாக கேப்டன் பதவியை வகிக்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஓப்பனிங்கில் ருதுராஜும் டெவன் கான்வேயும் இறங்குகிறார்கள்.   மூன்றாம் நிலையில் தொடர்ந்து 2 சீசன்களாக மோசமாக இருந்து வரும் ராகுல் திரிபாதிக்குப் பதில் ரச்சின் ரவீந்திர இடம்பெறலாம்.

ஷிவம் துபே... 

பேட்டிங்கில் 4-ம் நிலைக்கு விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹூடா இடையே கடும் போட்டி நிலவுகிறது.   அடுத்த நிலையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த ஷிவம் துபே வருவார். இவரது தன்னம்பிக்கை லெவல் அதிகமாக இருப்பதால் இவரைக் கட்டுப்படுத்த எதிரணியினர் தனியாக உத்திகளை வகுத்தாக வேண்டியுள்ளது. சாம் கரண் 3 சீசன்கள் பஞ்சாப் கிங்ஸுக்கு ஆடிய பிறகு இப்போது சி.எஸ்.கே. வுக்காக ஆடவிருக்கிறார். இவரும் ரவீந்திர ஜடேஜாவும் பினிஷிங் ரோலைப் பூர்த்தி செய்வார்கள், ஆனாலும் சாம் கரண் அனைத்துப் போட்டிகளிலும் ஆட வாய்ப்பில்லை.

டோனி பெரிய பலம்...

அடுத்து டோனி. இப்போதெல்லாம் அவர் 2 ஓவர் பிளேயர் ஆகிவிட்டார். இவருக்கு நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை. அணியின் உத்தியில் இவருடைய பங்கேற்பு பெரிய பலம். ஆகவே ஒரு ஆடும் பயிற்சியாளராகவே டோனி இருப்பார். விக்கெட் கீப்பிங்கில் இவருக்கு அடுத்த இடத்தில் டெவன் கான்வேதான் இருக்கிறார். அஸ்வின் மீண்டும் சொந்த மண்ணில் ஆடுவார். இவரும் கேப்டன்சி மெட்டீரியல் என்பதால் சி.எஸ்.கே.  இந்த முறை ஆட்கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தியாக உள்ளது.

உத்தேச லெவன்...

ருதுராஜ், கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, சாம் கரண், ஜடேஜா, டோனி, அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரணா, கலீல் அகமது (இம்பாக்ட் சப்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து