முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக பிளெஸ்ஸிஸ் நியமனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
Delhi-Kabeital 2025-03-17

Source: provided

புதுடில்லி : டில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடர்... 

இந்த ஆண்டு ஐ.பி.எல்.  தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இன்னும் சில நாள்களில் ஐ.பி.எல்.  தொடர் தொடங்கவுள்ள நிலையில், டில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டு பிளெஸ்ஸிஸ்... 

அண்மையில் டில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளார்.  டில்லி அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து டு பிளெஸ்ஸிஸ் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். டில்லி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். டில்லி அணியின் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும், அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறேன் என்றார்.

ஏலம் போகவில்லை...

40 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் கடந்த மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கேப்டனாக வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்பாக டு பிளெஸ்ஸிஸை ஆர்.சி.பி. தக்கவைக்கவில்லை. ஐ.பி.எல்.  மெகா ஏலத்தின் முதல் சுற்றில் ஏலம் போகாத டு பிளெஸ்ஸிஸ், ஏலத்தை நிறைவு செய்யும் விரைவு சுற்றில் டில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல்.  தொடரில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து