முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ட்ரூத் சோஷியல்' சமூக வலை தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.

அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி 16-ம் தேதி 3 மணிநேரம் கலந்துரையாடினார். அப்போது, 'டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்' என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இக்கலந்துரையாடல் காணொலியை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக கணக்கில் நேற்று பகிர்ந்தார்.

இந்நிலையில், இந்த சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். தனது முதல் பதிவாக, 'ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் உணர்ச்சிகரமான குரல்களுடன் கலந்துரையாடவும், ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபடவும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது கலந்துரையாடல் காணொலியை பகிர்ந்த டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், 'எனது நண்பர் ஜனாதிபதி டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம் இந்தியாவின் நாகரிக கண்ணோட்டம், உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்' என்று அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து