Idhayam Matrimony

மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி: மத்திய அரசிடம் இலங்கை அகதிகள் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

ராமேசுவரம் : இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.  இதன் காரணமாக,  வாழ்வாதாரம் தேடி, இலங்கையைச் சேர்ந்த சில தமிழ்க் குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தன. 2022 முதல், 96 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆண்கள், 95 பெண்கள், 58 சிறுவர்கள், 57 சிறுமிகள் உள்பட மொத்தம் 315 இலங்கைத் தமிழர்கள் பதிவு செய்யப்படாத படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராமேசுவரத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இருப்பினும், அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வ அகதி அந்தஸ்து இல்லாததால், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது.

உரிய அங்கீகாரமும் நிதியுதவியும் இல்லாததால், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில் பெரும் சவாலாக உள்ளது. வருமானம் ஏதுமில்லாமல், கைதிகள்போல அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இலங்கையைவிட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், மீண்டும் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து, தங்களை தாயகம் திருப்பி அனுப்பும் செயல்முறையில் தீவிரம் காட்டுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து