முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையைும் வென்றது நியூசி. அணி..!

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

மிட்செல் - அப்பாஸ்...

அதன்படி, நியூசிலாந்து அணியின் ரைஸ் மரியு மற்றும் நிக் கெல்லி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். ரைஸ் மரியு 18 ரன்களிலும், நிக் கெல்லி 31 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 22 ரன்களிலும், டேரில் மிட்சல் 18 ரன்களிலும், கேப்டன் பிரேஸ்வெல் 17 ரன்களும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. 6 வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே - முகமது அப்பாஸ் இருவரும் இணைந்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர். 6-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் அப்பாஸ் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஹே 99* ரன்களில்...

நாதன் ஸ்மித் 8 ரன்களிலும், பென் ஷீர்ஸ் 6 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹே, 49 ஓவர்வரை 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசி ஓவரை முகமது வாசிம் வீச, மிட்செல் ஹே அவரது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை ஓடவிட்டார். 49.5 ஓவரின் போது ஹேவின் முதல் சதத்துக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது. சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவுண்டரியுடன் முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார். அதிகபட்சமாக ஹே 99* ரன்களில் (7 பவுண்டரி, 7 சிக்ஸர்) ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம், சூஃபியான் முக்கீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தோல்வி...

பின்னர், 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் அணியால் 41.2 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஃபஹீம் அஸ்ரஃப் 73 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்), அதிரடி பேட்டராக மாறிய முன்னணி பந்துவீச்சாளர் நஷீம் ஷா 51 ரன்களும் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் பென் ஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேக்கப் டஃப்பி 3 விக்கெட்டுகளும் வில் ஓரூர்க், ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 99* ரன்கள் மட்டுமின்றி 4 கேட்ச்சுகளையும் பிடித்து அசத்திய மிட்செல் ஹே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

டி-20 தொடரையும்....

3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. ஏற்கனவே, முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. வில்லியம்சன், ரச்சின், சாண்டனர், லேதம், ஜேமிசன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலேயே நியூசிலாந்து அணி விளையாடி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து