முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா அணி கேப்டனாகிறாரா..? - ஐ.பி.எல். மும்பை அணியிலிருந்து விலகம் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

மும்பை : இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

30 ரன்கள் மட்டும்... 

இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்தத் தொடர் சொல்லும் படியாக அமையவில்லை. 3 போட்டிகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

கோவா அணிக்கு....

இவர் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையின்மைச் சான்று கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் கோவாவுக்குச் செல்லவிருப்பதாகவும், 2025- 26 தொடரில் கோவா அணியை அவர் தலைமைத் தாங்குவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அர்ஜூன் டெண்டுல்கர்....

23 வயதான ஜெய்ஸ்வால் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை 36 போட்டிகளில் விளையாடி 12 சதம், 12 அரைசதம் உள்பட 3712 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 391 ரன்கள் குவித்திருந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சித்தேஷ் லாட் ஆகியோரும் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து