முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டையை கிளப்பிய பூரன், மார்க்ரம்: குஜராத்தை அசத்தல் வெற்றி

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
Gujarat 11-04-2025

Source: provided

லக்னோ : ஐ.பி.எல். தொடரில்  நேற்றைய முதல் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி லக்னோ 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  அசத்தல் வெற்றி பெற்றது.

பந்துவீச்சு தேர்வு...

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 60 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

181 ரன்கள் இலக்கு...

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - ரிஷப் பண்ட் களமிறங்கினர். இதில் பண்ட் நிதானமாக விளையாட மார்க்ரம் அதிரடியாக களமிறங்கினார். ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய பண்ட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மார்க்ரம் - பூரன் அசத்தல்...

அடுத்து மார்க்ரமுடன் கை கோர்த்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியில் பட்டையை கிளப்ப லக்னோ வெற்றியை நோக்கி வெகுவாக முன்னேறியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே மார்க்ரம் 58 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டமிழந்த பின் குஜராத் பந்துவீச்சாளர்கள் லக்னோ அணிக்கு சிறிது நெருக்கடி கொடுத்தனர். டேவிட் மில்லர் 11 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே அடித்தது ஆட்டத்தை இறுதி ஓவர் வரை கொண்டு சென்றது. இருப்பினும் இறுதி கட்டத்தில் ஆயுஷ் பதோனி 28 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

பிரசித் 2 விக்கெட்...

19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 186 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து