முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி : பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      தமிழகம்
Eps 024-12-03

Source: provided

சென்னை : பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு  அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு  அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பங்குனி உத்திர நாளில் முடிவு செய்து மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின சுற்றுப் பயணத்துக்கும் நல்ல நாள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். கூட்டணி பற்றிய கவலை தீர்ந்துள்ளதால் இனி தமிழக அரசுக்கு எதிரான விஷயங்களை முன்னிலைப்படுத்தி தீவிர பிரசாரம் செய்வதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

இப்படி தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கூட்டணி பலத்துடன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருவதாகவும், அவர் எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது கோடை காலம் என்பதால் அது முடிந்த பின்பு சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா? இல்லை வெயிலை பொருட்படுத்தாமல் இப்போதே பிரசார பயணத்தை தொடங்கலாமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து