முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்: சமூகநீதிக்கான பயணத்தில் புதிய வடிவங்களில் தடைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : சமூகநீதிக்கான பயணத்தில் பல தடைகளும் புதிய வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகநீதி நாயகர் பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைப்புரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை தனது ஆணையத்தின் மூலம் அம்பலப்படுத்தி, சமூகநீதியை உயர்த்திப்பிடித்த நாயகர் பி.பி.மண்டல் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ் வணக்கம்.

மண்டல் கொண்ட பார்வையை இந்த தேசம் உணரும் முன்பே நன்குணர்ந்து அவரது நோக்கத்துக்குத் துணையாக உறுதியாக நின்றது திராவிட இயக்கம். அவர் முன்னெடுத்த போராட்டம் இன்னும் நிறைவுறவில்லை. துணிவும் நியாயமும் மிக்க அவரது பல பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படமாலே இருக்கின்றன. சமூகநீதிக்கான பயணத்தில் பல தடைகளும் புதிய வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. மண்டலைப் போற்றுவதென்பது அவரது கனவை முழுமையாக நிறைவேற்றுவதே அன்றி, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல. அவர் கனவை நிறைவேற்றும் போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து