முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முதல் பெண் அவை தலைவராக ஹலீமா தேர்வு

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

சிங்கப்பூர், ஜன. 10 - சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் முதல் பெண் அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலீமா யாகூப் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அவை தலைவராக இருந்த மைக்கேல் பால்மர் திருமண பந்தத்தை மீறி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இது வெளிச்சத்துக்கு வந்தததை தொடர்ந்து ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சி அளித்த நெருக்கடி காரணமாக கடந்த மாதம் அவர் பதவி விலகினார். 

இதனால் காலியாக உள்ள நாடாளுமன்ற அவை தலைவர் பதவிக்கு இணை அமைச்சர் ஹலீமா யாகூப்பை சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தேர்வு செய்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஹலீமா யாகூப்பை அவைத் தலைவராக நாடாளுமன்றம் இம்மாதம் 14 ம் தேதி கூடும் போது தேர்ந்தெடுப்போம். வேறொரு பதவியை வகிப்பவர்கள் அவை தலைவராக முடியாது என்பதால் அவர் இணை அமைச்சர் பதவியை 13 ம் தேதி ராஜினாமா செய்வார். இது குறித்து கட்சி எம்.பி.க்களுக்கு விளக்கினேன். அவர்கள் இந்த முடிவுக்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மொத்தம் 99 எம்.பி.க்களை கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அவை தலைவராக ஹலீமா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஹலீமா 2001 ம் ஆண்டில் அரசியலில் குதித்தார். இப்போது ஆளும் பி.ஏ.பி. கட்சியின் எம்.பி.யாக இருக்கும் அவர் 5 குழந்தைகளுக்கு தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago