எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,ஏப்.7 - பரமக்குடியில் சொத்து தகராறில் கூலிப்படையினர் மூலம் பா.ஜ.க. பிரமுகர் பைப்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ்சுவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் முருகன்(வயது46). முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலரான இவர் வாஜ்பாய் மன்ற தலைவராக இருந்து வந்தார். தேங்காய் கடை வைத்து நடத்திவந்த இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முருகன் கொலைசம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணையில் சொத்து பிரச்சனை தொடர்பாக கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தி தற்போது சென்னை டி.நகரில் வசித்துவரும் பரமக்குடி நாகூர்கனி என்பவரின் மகன் ராஜாமுகம்மது(58), பரமக்குடி திருவள்ளுவர் நகர் முத்துவயல் முத்துச்சாமி மகன் மனோகரன்(41), மதுரை காயிதேமில்லத்நகர் சுல்த்தான் அலாவுதீன் மகன் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா(35), மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெரு அகம்மது என்பவரின் மகன் சாகுல்ஹமீது(37) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட முருகனின் தாத்தா சிவஞானம் செட்டியாருக்கு வைகை நகர் பகுதியில் 6ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவர் இறந்தபின்னர் மகன் கதிரேசன் செட்டியார் அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளார். அப்போது, பரமக்குடி வேந்தோனி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற ராஜாமுகம்மது மேற்கண்ட சொத்தை தனது அக்காள் மகன் மனோகரன் பெயரில் போலி பத்திரம் தயாரித்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். இதுதொடர்பாக தொடாரப்பட்ட வழக்கில் கதிரேசன் செட்டியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது கதிரேசன் செட்டியார் குடும்பத்தினர் மீது விரோதம் கொண்டு இருந்துள்ளார். மேலும், மேற்கண்ட சொத்தினை கதிரேசன் செட்டியாரின் மகன்களான கொலைசெய்யப்பட்ட மருகன் மற்றும் அவரின் தம்பி சிவக்குமார் ஆகியோர் விற்க முயலும்போதெல்லாம் ராஜாமுகம்மது மிரட்டல் விடுத்து வந்ததோடு, வாங்குபவர்களையும் தடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி மேற்கண்ட சொத்தினை முருகன், சிவக்குமார் ஆகியோர் மதுரை மேலூரை சேர்ந்த ராஜாரபீக் என்ற ராஜாபாய் என்பவரிடம் ரூ.8கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த ராஜாமுகம்மது இதுதொடர்பாக பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க தனக்கு ரூ.ஒரு கோடியே 50லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு முருகன், சிவக்குமார் ஆகியோர் ரூ.85லட்சம் கொடுத்துள்ளனர். கேட்ட தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது தனது அக்கா மகன் மனோகரன் என்பவருடன் சேர்ந்து மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் முருகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி மேற்படி மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா, சாகுல்ஹமீது மற்றும் இன்னொருவர் மூலம் கொலை திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றி உள்ளனர். இதற்காக ராஜாமுகம்மது கூலிப்படையினருக்கு ரூ.2லட்சம் வழங்கி உள்ளார். கொலை சம்பவம் நடந்ததும் இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது ராஜாமுகம்மதுவின் பிரச்சனை தெரியவந்தது. இதுதொடர்பாக முதலில் சிக்கிய அவரின் மருமகன் மனோகரனை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கண்ட 4பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூலிப்படையினரின் மூளையாக செயல்பட்ட மதுரையை சேர்ந்த கூலிப்படைதலைவன் ஒருவனை தேடிவருகிறோம். இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட 4பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காட்டிக்கொடுத்த ரெயில் டிக்கெட்:
முருகனை கொலை செய்ய கூலிப்படையினர் மூலம் சதித்திட்டம் போட்ட ராஜாமுகம்மது தன்மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் இருப்பதுபோன்று காட்டுவதற்கு தன்பெயரில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். போலீசாரின் இந்த விசாரணையில் அவர் சம்பவம் நடந்தபோது சென்னையில் இல்லை என்பதும், முன்பதிவு செய்த ரெயிலில் பயணம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாரின் பிடியில் ராஜாமுகம்மது வசமாக சிக்கி உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வாழைக்காய் என்ற ரபீக்ராஜா பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்வதில் கைதேர்ந்தவன். மேலும், பிரபல பைப் வெடிகுண்டு குற்றவாளி போலீஸ் பகுர்தீன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு குற்றசம்பவங்களில் ்டுபட்டுள்ளார். கூலிப்படையினர் முருகனை கொலைசெய்ய வீசிய 3பைப் வெடிகுண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. வெடிக்காத 2பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு
23 Nov 2024சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக விலை உயர்வு தொடர்கிறது.
-
ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: இயக்குனர் ரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது புகார்
23 Nov 2024கோவை : கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், சுவாமி ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித் மற்றும்
-
அவதூறு பரப்பும் வீடியோக்கள்: நீக்கக்கோரி யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
23 Nov 2024சென்னை : அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 25, 26--ல் ஆரஞ்சு அலர்ட் : சென்னை வானிலை மையம் அறிவிப்பு
23 Nov 2024சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
-
விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்பு விழா : ராமதாஸுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்
23 Nov 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க.
-
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
23 Nov 2024சென்னை : 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்திற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது : அதானி குழும தலைமை நிதி அதிகாரி கண்டனம்
23 Nov 2024புதுடெல்லி : அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகே
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு : நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
23 Nov 2024சென்னை : கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலைக்கு தமிழக திருக்கோவில்கள் சார்பில் பிஸ்கெட் பாக்கெட், பிளாஸ்க்குகள் : அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்
23 Nov 2024சென்னை : தமிழக திருக்கோவில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணியி
-
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம்: வலுவான நிலையில் இந்தியா
23 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட் போட்டி 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், ராகுலில் அபார பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 218 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி வலுவான நிலைய
-
ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தலில் இன்டியா கூட்டணி வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
23 Nov 2024சென்னை : ஜார்கண்ட்டில் இன்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்களின் பட்டியல் : போக்குவரத்துத்துறை இணையத்தில் வெளியீடு
23 Nov 2024சென்னை : போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்த விஜய்
23 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.
-
தி.மு.க. யாருக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தது கிடையாது : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
23 Nov 2024திண்டுக்கல் : தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
-
வனத்துறையின் கட்டுப்பாட்டில் மீண்டும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு வர வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
23 Nov 2024சென்னை : வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலி
-
38 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஜோடி சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்தனர்.
-
14 மாநிலங்களில் 48 சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்
23 Nov 2024புதுடெல்லி : இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
-
அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
23 Nov 2024சென்னை : சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
-
மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை ஏதும் இல்லை : தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
-
2 மாநில தேர்தல் முடிவுகள் வெளியீடு: மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி : ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். கூட்டணி வெற்றி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் பிரியங்கா வெற்றி
23 Nov 2024வயநாடு : வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதற்கு முன் அங்கு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் சாதனையை
-
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்? - ஏக்நாத் ஷிண்டே பதில்
23 Nov 2024தானே : பா.ஜ.க.
-
மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி வெற்றி
23 Nov 2024அகர்தலா : மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா வெற்றி பெற்றார்.
-
பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி
23 Nov 2024பாட்னா : பீகார் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
-
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்: டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்கள் அடித்தன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்து புதி