முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் : அமைச்சர் நவாப் மாலிக் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே கொரோனா நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அத்துடன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது. 

இதற்கிடையில் சீரம் இந்தியா நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று சீரம் இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் மராட்டியத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.  நாட்டிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தினம்தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 18 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 18 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 16 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து