முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் புதிய எம்.எல்.ஏக்கள் இன்று காலை பதவியேற்கிறார்கள்: சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்க இருக்கிறார்கள் என்று சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு இன்று காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக  தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 10 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அரளி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக  பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

இதுபோன்ற காரணங்களால், முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களாகியும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், தற்காலிக சபாநாயகர், புதிய எம்.எல்.ஏ.,க்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து