முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைப்பூ வடை

Cooking time in minutes: 
20
Ingredients: 

வாழைப்பூ வடை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வாழைப்பூ - 1.
  2. பொட்டுக்கடலை - 50 கிராம். 
  3. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  4. சோம்புத்தூள் - 1/4  டீஸ்பூன்.
  5. பொடியா நறுக்கிய பச்சை மிளகாய்- 4.
  6. பொடியா நறுக்கிய கறிவேப்பிலை - 10.
  7. பொடியா நறுக்கிய பூண்டு  10 பல்.
  8. பொடியா நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு 
  9. மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.
  10. உப்பு - தேவையான அளவு.
  11. எண்ணெய் - 1/2 லிட்டர்.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் 50 கிராம் பொட்டுக்கடலையை  போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிய ஒரு வாழைப்பூவை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள வாழைப்பூவை போடவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் சோம்புத்தூள், பொடியா நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய 10 கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, பொடியா நறுக்கிய ஒரு இஞ்சி துண்டு,1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  5. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு வடை மாவு பதத்திற்கு  தயார் செய்து  வடைக்கு தட்டுவது போல் தட்டி  வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள வாழைப்பூ மாவை  ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும். 
  7. திருப்பி திருப்பி போட்டு வறுக்கவும். 
  8. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  9. சுவையான வாழைப்பூ வடை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago