முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்கண்டில் இன்று வாக்கு எண்ணிக்கை : இரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      இந்தியா
Voting-machin 2024-04-10

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலைக்குள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதே போல், ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 'இந்தியா' கூட்டணிக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து