முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சிவகங்கை பட்டமங்கலத்தில் தி.மு.க.வினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இல்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து