முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிஜ்ஜார் கொலை குறித்த ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      உலகம்
Modi 2023-09-16

Source: provided

ஒட்டோவா : காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.

முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும் அந்தச் செய்திகளில், நிஜ்ஜார் கொலை சதி பற்றி இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குத் தெரியும். என்றாலும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் ஆதாரம் எதுவும் கனடா அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து கனடா அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அக்டோபர் 14-ம் தேதியன்று, பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதால், ராயல் கனேடியன் மவுன்டன் போலீஸ் (ஆர்.சி.எம்.பி) மற்றும் அதன் அதிகாரிகள், கனடாவில் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்கள் குறித்து இந்திய அரசின் முகவர்களுக்கு தொடர்பு உண்டு என்ற பொது குற்றச்சாட்டினை முன்வைக்கும் அசாதாரண நடவடிக்கை எடுத்தது.

பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோரை கனடாவுக்குள் நடந்த குற்றச் செயல்களுடன் தொடர்பு படுத்துவது குறித்து கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கு ஆதாரங்களும் இல்லை. மற்றபடி ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஊகமானது, தவறானது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து