முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: புடின்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      உலகம்
Putin 2024 08 11

Source: provided

மாஸ்கோ : அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்ட புதிய ஒரேஷ்னிக் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் அனுமதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. 

உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என புடின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. 

தற்போதைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை என புடின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து