முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-11-22

Source: provided

புதுடெல்லி : டெல்லி சட்டசபை  தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெற்றி பெற செய்தால், இலவச மின்சாரம், கல்வி உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என  அறிவித்தார். 

டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதிஷி முதல்வராக உள்ளார். டெல்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைக்க, ஆம்ஆத்மி அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், நேற்று சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாத்தை ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

ஆம்ஆத்மி கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தால் தனது கட்சியால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வந்தால் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். எங்களது வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த, 65 ஆயிரம் கூட்டங்களை ஆம்ஆத்மி நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

இலவச கல்வி,  இலவச மின்சாரம், இலவச தண்ணீர்,  இலவச மருத்துவ சிகிச்சை, இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படும்,  அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு மூத்த குடிமக்களை வழிபாடு செய்ய அழைத்து செல்வோம் என்ற 6 வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அறிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து