முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
Grama-Sabha 2024-10-23

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் இன்று  கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை  நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

தமிழகம் முழுவதும் இன்று 23-ம் தேதி காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும். 

மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.  மேலும், தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும். 

கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

மேலும், இன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடுவதுடன் கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செல்போன் ஆப் மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து