முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பருப்பு உருண்டை குழம்பு

Cooking time in minutes: 
30
Ingredients: 

பருப்பு உருண்டை குழம்பு  செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சீரகம் - ஒரு ஸ்பூன்.
  2. சோம்பு - 2 ஸ்பூன்.
  3. தேங்காய் - 1.
  4. கடலைபருப்பு - 200 கிராம்.
  5. துவரம் பருப்பு - 25 கிராம்.
  6. பொடியா நறுக்கிய - 2 பெரிய வெங்காயம்.
  7. பொடியா நறுக்கி - 4 பல் பூண்டு.
  8. பொடியா நறுக்கிய - 2 பச்சை மிளகாய்.
  9. பொடியா நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
  10. உப்பு - தேவையான அளவு. 
  11. எண்ணெய் - தேவையான அளவு. 
  12. கடுகு,உளுந்து - ஒரு ஸ்பூன்.
  13. பட்டை -1.
  14. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.
  15. பொடியா நறுக்கிய சின்னவெங்காயம் -10.
  16. மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
  17. பொடியா நறுக்கிய தக்காளி - 2.
  18. மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்.
  19. மல்லித்தூள் - 4 ஸ்பூன்.
  20. மஞ்சள்தூள்  - ஒரு டீஸ்பூன். 
  21. புளி - சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
  2. மிக்சி ஜாரில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியா நறுக்கிய 1/2 மூடி தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்து சுத்தம் செய்த 200 கிராம் கடலைபருப்பு, 25 கிராம் துவரம் பருப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சோம்பு போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மிக்சியில அரைத்த கடலைப்பருப்பை போடவும்,இதனுடன் பொடியா நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,பொடியா நறுக்கிய 10 கறிவேப்பிலை,பொடியா நறுக்கிய 2 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், பொடியா நறுக்கிய ஒரு தேங்காய்சில் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து விட்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு,உளுந்து, ஒரு பட்டை, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 1/4 டீஸ்பூன் சோம்பு,பொடியா நறுக்கிய 10 சின்னவெங்காயம்,பொடியா நறுக்கிய 2 பூண்டு பல்,கொஞ்சம் மல்லி, கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் பொடியா நறுக்கிய 2 தக்காளி,2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 4 ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு கலந்து விட்டு கரைத்து வைத்துள்ள ஒரு கப் புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து விட்டு,5 நிமிடம் கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.
  9. 5 நிமிடம் ஆகிவிட்டது,மூடியை திறந்து பார்க்கலாம்,குழம்பு நன்றாக கொதிக்கிறது இப்போது தயார் செய்து வைத்துள்ள பருப்பு மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக குழம்பில் போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி வேக விடவும்.
  10. 5 நிமிடம் ஆகிவிட்டது,இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago