முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் நகெட்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் நகெட்ஸ்  செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் - 1/2  கிலோ.
  2. பிரட் துண்டுகள் - 5.
  3. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  4. மிளகு தூள் - 1 1/2 ஸ்பூன்.
  5. சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்.
  6. கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்.
  7. சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்.
  8. மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்.
  9. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  10. முட்டை - 2.
  11. பால்  - 2 ஸ்பூன்.
  12. பிரட் கிரம்ஸ் - ஒரு கப்.
  13. உப்பு - தேவையான - அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. 5 பிரட் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு மிக்சி ஜாரில் வெட்டிய பிரட் துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும், இதனுடன் சிக்கன் 1/2  கிலோ,ஒரு ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,சோம்பு தூள் 1/4 ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/4 ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும்  தேவையான  அளவு உப்பு போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சி ஜாரில் அரைத்தவற்றை ஒரு தட்டில் போட்டு சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி கலந்து விட்டு சமமாக தட்டி பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பவுலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி இதனுடன்  மிளகு தூள் ஒரு ஸ்பூன்,பால் 2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
  6. தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. இதே போல் மீதம் உள்ள சிக்கன் துண்டுகளையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  10. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான சிக்கன் நகெட்ஸ்  ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago