முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் குலாப் ஜாமுன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பிரட் குலாப் ஜாமுன் செய்யத் தேவையான பொருட்கள்.

 

  1. பிரட் துண்டுகள் - 10.
  2. ரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன்.
  3. கெட்டியான பால் - 1/2 கப்.
  4. பாதாம் பருப்பு தூள் - 2 ஸ்பூன்.
  5. சர்க்கரை - 1 கப்.
  6. பொடி செய்த ஏலக்காய் -2.
  7. குங்குமப்பூ - சிறிதளவு.
  8. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  9. தேங்காய் துருவல் - சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு தட்டில் 10 பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் உள்ள பகுதியை நீக்கி விட்டு பின்னர் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. இதே போல் மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்
  3. ஒரு மிக்சி ஜாரில் பிரட் துண்டுகளை போட்டு நன்றாக  அரைத்து அதை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் 2 ஸ்பூன் பாதாம் பருப்பு தூள்,ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் கெட்டியான பால் 1/2 கப் ஊற்றி நன்றாக கலந்து விட்டு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து ஒரு கப் தண்ணீர்,ஒரு கப் சர்க்கரை,பொடி செய்த 2 ஏலக்காய் மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை போட்டு நன்றாக கலந்து விட்டு சர்க்கரை பாகை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்,எண்ணெய் சூடானவுடன் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு  பொரிக்கவும்,திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகில்,பொரித்து  வைத்துள்ள உருண்டைகளை போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் பிரட் குலாப்  ஜாமூனை ஊற வைக்கவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி ,சிறிதளவு தேங்காய் துருவலை தூவி விடவும்.
  9. சுவையான பிரட் குலாப் ஜாமுன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago