முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
Kashmir 2023 04 09

புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சத்ரு வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் மாநில போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் அன்று இரவு தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இதனிடையே, பாதகமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை நிலவிவரும் போதிலும் அங்கு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் நேற்று (சனிக்கிழமை) கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஒரு வருடமாக செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த ஒரு உயர் மட்டத்தலைவர் சைஃபுல்லாஹ் இதில் கொல்லப்பட்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து