முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      உலகம்
Joe-Biden 2023-09-27

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க அதிபர் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார்.

ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் ஜோ பைடன், தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். 

தொடர்ந்து போராட்டத்தில் பேசிய அவர், தொழிலாளர்கள் தற்போது வாங்குவதை விட அதிக ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த 15-ம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர்.  இந்த கூட்டமைப்பில் சுமார் 1 லட்சத்துக்கு ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

அமெரிக்காவில் உற்பத்தியாகும் 50 சதவீத வாகனங்கள் இந்த மூன்று நிறுவனங்களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து