Idhayam Matrimony

இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டும் - வாசிம் ஜாபர்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      விளையாட்டு
Wasim-Zafar 2023-12-10

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. 

அந்த வகையில்  ரசிகர்களை கவர்வதற்காகவும் புதுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.அந்த விதிமுறைப்படி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மற்றொரு வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி உள்ளே வரும் வீரர் மற்ற வீரர்களைப் போலவே முழுமையாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக வாசிம் ஜாபர்  தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளது பின்வருமாறு;- 

"இம்பேக்ட்  பிளேயர் விதிமுறையை நீக்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதுகிறேன். அது ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான ஊக்கத்தை கொடுக்கவில்லை. ஏற்கனவே ஆல் ரவுண்டர்களுக்கான பஞ்சமும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருக்கும் பிரச்சனையும் இந்திய கிரிக்கெட்டில் நிலவுகிறது. இது பற்றி உங்களுடைய கருத்துகள் என்ன?" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து