முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

திணைஅரிசி பொங்கல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

திணைஅரிசி பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. பாசி பருப்பு - 150 கிராம்.
  2. திணை அரிசி - 400 கிராம்.
  3. பால் - 400 மில்லி.
  4. நெய் - 9 ஸ்பூன்.
  5. துருவிய தேங்காய் - 1/2 முடி.
  6. வெல்லம் - 750 கிராம்.
  7. பாதாம் பருப்பு - 5.
  8. முந்திரி பருப்பு - 10.
  9. திராட்சை - 10.
  10. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை.
  11. உப்பு - ஒரு சிட்டிகை.

 

 

Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து  150 கிராம் பாசி பருப்பை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து ஒரு மணிநேரம் ஊறவைத்த 400 கிராம் திணை அரிசியை போட்டு 1/2   தண்ணீர் மற்றும் 300 மில்லி பாலை ஊற்றி வறுத்து வைத்துள்ள பாசி பருப்பை போட்டு கலந்து விட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை நன்றாக வேக  வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து  2 ஸ்பூன் நெய்யை ஊற்றவும்,நெய் சூடானவுடன் துருவிய 1/2 முடி தேங்காயை போட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 750 கிராம் வெல்லம் வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க  வைத்து வெல்லப்பாகை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. இறக்கி வைத்துள்ள குக்கரை அடுப்பில் வைத்து 300 மில்லி பால் ஊற்றி கலந்து விடவும்.
  6. இதனுடன் தயார் செய்து வைத்துள்ளவெல்லப்பாகை ஊற்றி,ஒரு சிட்டிகை உப்பு போட்டு, வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை போட்டு, ஒரு ஸ்பூன் நெய்  ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  7. இதனுடன் மேலும் 4  ஸ்பூன் நெய்  ஊற்றி கலந்து விட்டு குக்கரை அடுப்பில் இறக்கி  வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் 5 பாதாம் பருப்பை உடைத்து போட்டு நன்றாக வறுத்து  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து  10 முந்திரி பருப்பை போட்டு நன்றாக வறுத்து  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் 10 திராட்சையை  போட்டு நன்றாக வறுத்து  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. திணை அரிசி  பொங்கலில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை போட்டு கலந்து விடவும்.
  12. இதனுடன் வறுத்து வைத்துள்ள பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,திராட்சை ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து விடவும்.
  13. சுவையான திணைஅரிசி பொங்கல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago