முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

திங்கட்கிழமை, 13 மே 2024      இந்தியா
Modi 2023 07 30

புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி ராஜஸ்தானில் நடந்த பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, ''ஹிந்துக்களின் வளங்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு காங்கிரஸ் வழங்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உள்ளது'' எனப் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மேலும் காங்கிரஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகாரளிக்கப்பட்டது. ஆனாலும், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை. எனவே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அக்கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''மனுதாரரின் புகாரை சட்டத்தின்படி தன்னிச்சையாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது'' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து