முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜி மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
Ananda-Bose 2024-05-03

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில கவர்னர் ஆனந்தபோஸ், கொல்கத்தா ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால், இந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பேசும்போது, சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்  எனக்கூறியிருந்தார். இதனை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வழிமொழிந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த கவர்னர் ஆனந்தபோஸ், மக்கள் பிரதிநிதிகள் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பரப்பக் கூடாது எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்துக்காக மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கொல்கத்தா ஐகோர்ட்டில் கவர்னர் ஆனந்தபோஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து