முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 கிரிக்கெட் போட்டியில் நிக்கோலஸ் பூரன் உலக சாதனை

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      விளையாட்டு
Nicholas-Pooran 2024-03-28

Source: provided

டிரினிடாட் : டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

176 ரன்கள் இலக்கு...

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து 176 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பார்படாஸ் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 30 ரன் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

ஒரு ஆண்டில் அதிக ரன்...

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய நிக்கோலஸ் பூரன் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், உள்ளூர், டி20 லீக்குகள்) ஒரு ஆண்டில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை (2036 ரன்) பின்னுக்கு தள்ளி நிக்கோலஸ் பூரன் (2059 ரன்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஒரு வருடத்தில் அதிக ரன்கள்:

1) நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 2059 ரன் (2024).

2) முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 2036 ரன் (2021).

3) அலெக்ஸ் ஹேலஸ் (இங்கிலாந்து) - 1946 ரன் (2022).

4) ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 1833 ரன் (2023).

5) முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 1817 ரன் (2022).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து