முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கனமழை: கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
Kerala 2024-06-30

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மறுகரைக்கு சென்று சேர்ந்தன. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த வனப்பகுதி வழியாக கபினி ஆறு பாய்ந்தோடுகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் யானை மற்றும் ஒரு குட்டி யானை ஆகியவை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. 

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் இரண்டு யானைகளும் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள், வெள்ளப்பெருக்கு காரணமாக யானைகளுக்கு உதவி செய்ய முடியாத சூழலில் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இதனிடையே நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் இரண்டு யானைகளும் பத்திரமாக மறுகரைக்கு சென்று சேர்ந்தன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து